தந்தை இறந்த அன்றும் தேர்வு எழுதிய மாணவி
கடலூரில் தந்தை இறந்த அன்று 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவி 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கிரிஜாவின் தந்தை ஞானவேல் பொம்மை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாட தேர்வு அன்று அதிகாலையில் கிரிஜாவின் தந்தை ஞானவேல் உடல் நல குறைவால் காலமானார்.
தந்தை இறந்த அன்றும் கல்வியின் முக்கியத்துவத்தை கருதி மாணவி கிரிஜா பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். சோகமே உருவாய் தேர்வு உள்ளது எவருக்கு ஆசிரியர்கள் சக மாணவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கிரிஜா 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தந்தை இறந்த அன்று எழுதிய வேதியல் பாடத்தில் மட்டும் நூற்றுக்கு 81 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மாணவி கிரிஜாவுக்கு குடும்பத்தினரும் சக மாணவர்களும் கிராம மக்களும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.