- Advertisement -
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் தள்ளிப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை ஆய்வு செய்யும் 7-வது நிதிக் குழுவின் அறிக்கை அடுத்த மாதமான ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், தற்போது அந்த அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலை தொடர்பான நிதிக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் மேலும் தாமதமாகக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
