Homeசெய்திகள்தமிழ்நாடுசனாதனம் என்ன விளையாட்டா? கொந்தளித்த தமிழிசை

சனாதனம் என்ன விளையாட்டா? கொந்தளித்த தமிழிசை

-

சனாதனம் என்ன விளையாட்டா? கொந்தளித்த தமிழிசை

திமுகவினருக்கு சனாதனம் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Image

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான மக்கள் மனதை புண்படுத்தும் படியான ஒரு கருத்தை சொல்லி உள்ளீர்கள். அவர்களுக்கு சனாதனம் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல. பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும் ஒன்று. பாரத தேசம் என்று அழைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். பாரத தேசம் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். குற்றம் சாட்டுவது காங்கிரஸ் கட்சியினரின் வாடிக்கை தான்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு, எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குவோம் என பிரதமர் மோடி கூறினார். அதற்கு ஏற்ப பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சூரியனை சிலர் சின்னமாக வைத்திருக்கிறார்கள். உங்களால் சுவற்றில்தான் வரைய முடியும். ஆனால் நாங்கள் சூரியனுக்கே செல்ல தயாராகிவிட்டோம். சனாதனத்தை அழித்து, ஒழித்துவிட முடியாது. சனாதனம் உலகம் முழுவதும் பரவிவருகிறது. சனாதன தர்மம் என்பது வாழ்வியல் தர்மம். குறிப்பிட்ட மக்கள் பின்பற்றுவதை புண்படுத்தக்கூடாது. சனாதனத்தை ஒழிப்போம் என சொல்ல சொல்ல அது வளரும். சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதுகுறித்த புரிதல் இல்லை.

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஓப்புதல் வழங்கியுள்ளது. புதுச்சேரி மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 10 % இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நனவாகும். இதற்காக பணியாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

MUST READ