spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டணக் குறைப்பு அமல்!

அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டணக் குறைப்பு அமல்!

-

- Advertisement -

 

"முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு"!
Photo: TNEB

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டணக் குறைப்பு இன்று (நவ.01) முதல் அமலுக்கு வந்துள்ளது.

we-r-hiring

பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

அதன்படி, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு யூனிட்டிற்கு 8.15 ரூபாயில் இருந்து 5.50 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை 10 வீடுகள் (அல்லது) அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் (அல்லது) அதற்கு குறைவாக மின்தூக்கி வசதியில்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின் கட்டணம், அறிமுகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவுத் தொடக்கம்!

தமிழக அரசின் கொள்கை வழிகாட்டுதலின் படி, இந்த கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டி, இருப்பதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள், பெரிதும் பாதிப்பைச் சந்தித்து வருவதால், மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

MUST READ