Homeசெய்திகள்தமிழ்நாடுதக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை

-

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கூடை கூடையாக கொட்டிக்கிடக்கும் நிலையில், வாங்க ஆள் இல்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது. தக்காளி அதிகம் விளையும் மாநிலங்களில் கடும் மழை பாதிப்பால், விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விலைவாசியால் மக்கள் அவதிப்படுவதை தடுக்க தமிழகத்தில் 500 ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை பாதியாக குறைந்து கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது. தக்காளி வரத்து அதிகமில்லாத நிலையில், குறைந்த அளவிலான தக்காளியையே வியாபாரிகள் வாங்கியதால் குறைந்த விலைக்கு விற்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஆடி மாதம் என்றாலே தள்ளுபடி தான் நியாபகத்துக்கு வரும், அந்தவகையில், துணிகடைகள் மற்றும் நகைக்கடைகளுக்கு மத்தியில் தக்காளி வியாபாரிகளும் ஆடி ஆஃபரில் தக்காளியை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்கின்றனர்.

MUST READ