Homeசெய்திகள்தமிழ்நாடுவேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு!

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு!

-

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16ம் தேதி வெளியிட்டார். அதன் படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கையானது வருகிற ஜீன் 4ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று (மார்ச் 30) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்கள், தென் சென்னையில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரம் தொகுதிகளில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

MUST READ