Homeசெய்திகள்தமிழ்நாடு10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்

10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்

-

10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்

கல்வி முதல் கலைகள் வரை நாம் பயில பல்வேறு பயிற்சி மையங்கள் இயங்கி வருவது நமக்குத் தெரியும். ஆனால் தரமான பரோட்டா செய்யும் முறைகளை பயிற்றுவிக்க தனி பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருவது தெரியுமா மதுரை செல்பி பரோட்டா ஸ்கூல் குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்

பரோட்டா மைதாவை முக்கிய இடுபொருளாகக் கொண்ட இந்த உணவுதான் பிரியாணிக்கு பிறகு தமிழ்நாட்டில் அதிக அளவு பிரபலம். பார்ப்பதற்கு சாதாரண வகை உணவாக தெரிந்தாலும் பரோட்டாவிற்கு மாவு பிசைவது, உருட்டுவது, சுருட்டுவது, வீசுவது உள்ளிட்ட அனைத்துமே ஒரு கலை போன்றது.

இதனை முறைப்படி கற்றுக் கொள்ள இளைஞர்களிடையே ஆர்வமும் அதிகரித்துவரும் நிலையில் பரோட்டா தயாரிப்பினை ஒரு பயிற்சியாகவே அளித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஆன முகமது காசிம்.

 

10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்

ரோல் பரோட்டா, கொத்து பரோட்டா, விச் பரோட்டா, பேப்பர் பரோட்டா, முட்டை பரோட்டா, எண்ணெய் பரோட்டா, சிலோன் பரோட்டா, பண் பரோட்டா, வாழை இலை பரோட்டா, மலபார் பரோட்டா என நீளும் பரோட்டாவின் வகைகள் அனைத்தையும் தயாரிக்க மதுரை செல்பி பரோட்டா கோச்சிங் சென்டரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

10 நாட்களில் இங்கு மாஸ்டராகலாம் என்பதால் 14 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை பரோட்டா தயாரிக்கும் முறைகளை ஆர்வமாக கற்று வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் சில பள்ளி மாணவர்களும் பரோட்டா தயாரிப்பினை கற்றுக் கொள்கின்றனர்.

10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்

பரோட்டா மாஸ்டர்களுக்கு வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு இருப்பதாலும் பெரிய முதலீடு இன்றி நாளொன்றுக்கு 800 முதல் 1300 ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதாலும் பரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது என்கிறார் பயிற்றுநர் முகமது காசிம்.

இவர் ஆன்லைன் மூலம் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரோட்டா தயாரிப்பு வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ