கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ரயில்வே துறை சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த குழுவினர், விபத்து தொடர்பாக கேட் கீப்பர், லோகோ பைலட், ஆலம்பாக்கம் ரயில் நிலைய மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய மேலாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் உள்ளிட்ட 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தேவை ஏற்பட்டால் கூடுதல் நபர்களையும் விசாரணைக்காக அழைப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக யாரும் ஆஜராகவில்லை. விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. முறையான விசாரணைக்கு பிறகு விபத்துக்கான காரணம் கண்டறியப்படும். அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடமாக +2 மாணவிக்கு காதல் தொல்லை…52 வயது முதியவர் கைது
