spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் - கவிஞா் வைரமுத்து

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் – கவிஞா் வைரமுத்து

-

- Advertisement -

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் - கவிஞா் வைரமுத்துஇது குறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “மனிதர்களின்தோள் வலிமையைத் தாண்டித்
தொழில் நுட்பப்
பிசாசுகளின் கைகளுக்கு
இடம்பெயர்ந்துவிட்டது போர்
அணு ஆயுத அழிவுகள்
அனுமானிக்க முடியாதபடி
இருக்கும்
பைத்தியக்காரன் இழுக்கும்
நேர்கோடு
எப்போதும் நேராக வாராது;
போரும் அப்படித்தான்
நமது சாப்பாடும் தூக்கமும்
ஏதோ ஒரு நாட்டின்
நகர்வோடு
முடிச்சுப் போடப்பட்டுவிட்டது
ஈரானின் “ஹோர் முஸ்”
நீரிணை மூடப்பட்டுவிட்டால்
தெற்காசியாவின்
ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும்
ஒவ்வொரு வீட்டு உண்டியலும்
களவாடப் படும்
மூளும் போர்
நீளும் போராக இல்லாமல்
நிறுத்தப்பட வேண்டும்
ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில்
நாற்காலிகளில் ஏறிநின்று
பேசவேண்டும்‘போர் ஒழிக’
இல்லையேல்
ஒவ்வொரு நாட்டுச் சூரியனும்
மூடப்படும்
தொலைக்காட்சிகளின்
போர்க் காட்சிகளை
வாண வேடிக்கையென்று
காணவேண்டாம் யாரும்
அதுவே
சொந்த வீதியில் நடந்தால்
என்னவாகும் என்று
எண்ணிப் பாருங்கள்
எல்லா மனிதரும்
போருக்கு எதிரான
பதாகையாக வேண்டும் என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.

ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!

MUST READ