Homeசெய்திகள்தமிழ்நாடுதூய சக்திக்குச் சோதனையா? ரூ.100 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் த.வெ.க. அமைச்சர்!

தூய சக்திக்குச் சோதனையா? ரூ.100 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் த.வெ.க. அமைச்சர்!

-

- Advertisement -

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், த.வெ.க. அமைச்சரவையின் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மீது ரூ.100 கோடிக்கும் அதிகமான டெண்டர் முறைகேடு மற்றும் வசூல் புகார்கள் எழுந்துள்ளன. முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் ஸ்ரீநாத், ரமேஷ் என்ற புரோக்கர் மூலம் தனது துறையின் டெண்டர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தூய சக்திக்குச் சோதனையா? ரூ.100 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் த.வெ.க. அமைச்சர்!

we-r-hiring

அபிராமிபுரத்தில் ரகசிய டீலிங் ஆபீஸ்!
சென்னை அபிராமிபுரம் 4-வது தெருவில் உள்ள ‘கோவிந்தாலயா க்ரெஸ்ப்ராஸ்’ அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடி வீடு இதற்காகவே வாடகைக்கு எடுக்கப்பட்டு, ரகசிய அலுவலகமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தரைத்தளத்தில் நின்றுகொண்டு ஒரு நபர், குறிப்பிட்ட ஒரு கைபேசி எண்ணை (8220736…) வழங்கி வரும் நபர்களைக் கண்காணிக்கிறார். வரும் நபர் உண்மையான நிறுவன உரிமையாளர்தானா என்பதை உறுதி செய்த பிறகே, 3-வது மாடியில் இருக்கும் புரோக்கர் ரமேஷிடம் அழைத்துச் செல்கிறார்.

‘வின் பாஸ்ட்’ நிறுவனத்துடன் ரூ.25 கோடி அட்வான்ஸ்?
கடந்த வாரம் இதே குடியிருப்பில் வைத்து ‘வின் பாஸ்ட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் மீன்வளத்துறை கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த டீல் முடிந்த கையோடு முன்பணமாக ரூ.25 கோடி கைமாறியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  “தொழில்துறை அமைச்சரும் நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளார், உங்களுக்கு எந்த வேலை என்றாலும் முடித்துக் கொடுக்கலாம்” என வின் பாஸ்ட் நிறுவனத்திடம் புரோக்கர் ரமேஷ் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொழில்துறையிலும் வலைவீச்சு!
தொழில்துறை அமைச்சருக்கு ஹவாலா பணத்தை மாற்றும் முயற்சியில் அவரது தரப்பினர் ஈடுபட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ரமேஷ், அந்தப் பணியைத் தான் முடித்துத் தருவதாக மீன்வளத்துறை அமைச்சரிடம் கூறியுள்ளார். தனக்கு தொழில்துறை அமைச்சரை மட்டும் அறிமுகம் செய்து வைக்குமாறு ரமேஷ் கேட்க, அமைச்சரும் “நம்ம தம்பிதான்” என அவரை அறிமுகம் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், மீன்வளத்துறை அரசு அதிகாரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் குழுவிலும் இந்த புரோக்கர் ரமேஷின் எண் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அத்துறையின் இடமாற்றங்களுக்கும் (Transfers) பெருந்தொகை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தூய சக்திக்குச் சோதனையா? ரூ.100 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் த.வெ.க. அமைச்சர்!

யார் இந்த புரோக்கர் ரமேஷ்? பிண்ணனி என்ன?
ஆரம்பத்தில் ஆடம்பர கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, முக்கியப் புள்ளிகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு வாரியப் பதவிகள் மற்றும் அறநிலையத்துறை அறங்காவலர் பதவிகள் வாங்கித் தருவதாகப் பலரை ஏமாற்றிய வரலாறைக் கொண்டவர் இந்த ரமேஷ். இதன் பின்னணியில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருடன் திகார் சிறையில் இருக்கும் கமலேஷ் என்ற மார்வாடியின் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கமலேஷின் நண்பரான இந்த ரமேஷ், தற்போது மீன்வளத்துறை அமைச்சரை ‘டிபென்டர்’ சொகுசு கார் மூலமாகத் தன் வசப்படுத்தியுள்ளார். இந்த கார் தற்போது வரை அஜய்குமார் என்பவர் பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய்க்கு நெருக்கடி?
“தூய சக்தி” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) ஆட்சியில், இந்த விவகாரம் முதல்வர் விஜய்க்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒட்டுமொத்த முறைகேடுகள் குறித்தும் “அமலாக்கத்துறை (ED)” ஆதாரப்பூர்வமாகத் தகவல்களைத் திரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஆளும்கட்சி அமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை வலைவீசுவது, தலைமைக்கு வைக்கப்படும் பொறியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

“பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!” — தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து!

MUST READ