Homeசெய்திகள்தமிழ்நாடு"ஊடக சுதந்திரத்தை நசுக்காதே!" – புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்புக்கு சி.பி.ஐ. கடும் கண்டனம்!

“ஊடக சுதந்திரத்தை நசுக்காதே!” – புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்புக்கு சி.பி.ஐ. கடும் கண்டனம்!

-

- Advertisement -

தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் விசாரணை என்ற பெயரில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதுநிலை ஆசிரியர் விஜயனைக் காவல் துறை அலைக்கழித்து வருவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது."ஊடக சுதந்திரத்தை நசுக்காதே!" – புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்புக்கு சி.பி.ஐ. கடும் கண்டனம்!

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை விவரம் பின்வருமாறு,” தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் திருவல்லிக்கேணி காவல் துறை, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதுநிலை ஆசிரியர் விஜயனை அலைக்கழித்து வருகிறது. குற்றச்சாட்டு எழும் போது, அது தொடர்பாக விசாரணை மேற்கொள்வது காவல் துறையின் சட்டம் சார்ந்த கடமையாகும். ஆனால், அந்த விசாரணை சட்ட முறைகளையும், நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் பின்பற்றி மட்டுமே நடத்தப்பட வேண்டும்."ஊடக சுதந்திரத்தை நசுக்காதே!" – புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்புக்கு சி.பி.ஐ. கடும் கண்டனம்!

we-r-hiring

முதுநிலை செய்தி ஆசிரியர் விஜயன் நெறிப்படுத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வோர் அனைவரும் அவரோடு தொடர்பில் இருப்பதும், அவரும் அவர்களைத் தொடர்பு கொள்வதும் முற்றிலும் தொழில் சார்ந்த பணியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு விஜயன் மீது குற்றம் சுமத்த முயல்வது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.  இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பு மிகவும் அபத்தமானது. கடந்த கால ஆட்சிகளில் நடந்த அத்துமீறல்களைப் பட்டியலிட்டு, இன்றைய தவறை நியாயப்படுத்தும் வகையில் வலிந்து பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை அச்சுறுத்தப்படுவதும், கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதும் மற்றும் மறுப்பதும் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மேலும், ஊடகவியலாளர் விஜயன் அலைக்கழிக்கப்படுவதை உடனடியாகக் கைவிட்டு, அவர் சுதந்திரமாகப் பணியாற்றும் சூழலை அரசு உறுதிப்படுத்திட வேண்டும் என அந்த அறிக்கையில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு: செல்போன் பறிமுதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

MUST READ