Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை?" – அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திருமாவளவன் ஆவேசம்!

“தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை?” – அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திருமாவளவன் ஆவேசம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலைகளை நிறுவ நிலவும் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரியும், சேலத்தில் கைது செய்யப்பட்ட தலித் மக்களை விடுதலை செய்யக் கோரியும் திருமாவளவன் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிய-மதவாதக் கட்சிகளுடன் விசிக என்றும் கூட்டணி வைக்காது எனத் தெளிவுபடுத்தியவர், பத்திரிகையாளர் விஜயன் மீதான போலீஸ் அச்சுறுத்தலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்."தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை?" – அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திருமாவளவன் ஆவேசம்!

“விசிக எக்காலத்திலும் சாதிய, மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்காது” – தவெக அரசுக்குச் சில அறிவுறுத்தல்கள்!
“தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் அண்ணல் அம்பேத்கர் சிலைகளை எளிதாக நிறுவ முடிகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் சிலைகளை நிறுவப் பல கட்டுப்பாடுகளும், அனுமதிகளும் தேவைப்படும் நிலை நீடிப்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சேலம் சிலை விவகாரம், தவெக அரசின் போக்கு மற்றும் ஊடகவியலாளர் விஜயன் அலைக்கழிப்பு விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்."தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை?" – அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திருமாவளவன் ஆவேசம்!

we-r-hiring

சேலம் விவகாரத்தில் தலித் மக்கள் குறிவைக்கப்படுகிறார்களா?
செய்தியாளர்கள் சந்திப்பில் சேலம் விவகாரம் குறித்துப் பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் அம்பேத்கர் சிலைகளை நிறுவ வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற வேண்டும் என்பதும், அதுவும் வெண்கலச் சிலையாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் அநீதியானது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக அம்பேத்கர் சிலைகளை நிறுவ அரசு தடையின்றி அனுமதிக்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, தலித் அல்லாத பிற சமூகத்தினர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், தலித் மக்கள் மீது மட்டும் திட்டமிட்டு வழக்குகளைப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிக்கித் தவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தவெக அரசு நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

தவெக – பாமக இணக்கம் மற்றும் விசிக-வின் கூட்டணி நிலைப்பாடு
தற்போது தமிழக அரசியலில் ‘தவெக மற்றும் பாமக இடையே இணக்கமான போக்கு நிலவுகிறதே?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தவெக தங்களுக்குத் தேவையான யாருடனும் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்துக்கொள்ளட்டும், அது அவர்கள் விருப்பம். ஆனால், தவெக-விற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே எப்போதுமே நல்ல இணக்கமான சூழல் நிலவி வருகிறது” என்றார். "தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை?" – அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திருமாவளவன் ஆவேசம்!

தொடர்ந்து, ‘பாஜகவை எதிர்ப்பதற்காகப் பாமகவுடன் இணைந்து விசிக பயணிக்க வாய்ப்புள்ளதா?’ என்ற கேள்விக்கு மிக உறுதியாகப் பதிலளித்த திருமாவளவன், “எங்களைப் பொறுத்தவரை கொள்கையில் மிகத் தெளிவாக இருக்கிறோம். சாதிய மற்றும் மதவாத அரசியலைத் தங்களது அடித்தளமாகக் கொண்டுள்ள கட்சிகளோடு, தேர்தலுக்காகக் கூட நாங்கள் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். இந்த கொள்கை நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதியாக நிற்கும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் விஜயன் விவகாரம்: அச்சுறுத்தும் போக்கை கைவிடுக!
அண்மையில் புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் காவல்துறையினரால் நள்ளிரவில் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் திருமாவளவன் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். “நெறியாளர் விஜயன் ஒட்டுமொத்த நாடறிந்த ஒரு மூத்த ஊடகவியலாளர். காவல்துறை விசாரணை நடத்தக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அவர் மீது தேவையின்றி சந்தேகப்பட்டு, விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் இழுத்தடித்து, அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது விசாரணையைப் போலத் தெரியவில்லை; மாறாக ஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு அராஜகப் போக்கு போலத் தோன்றுகிறது. ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் இத்தகைய அச்சுறுத்தல் போக்கைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று தொல். திருமாவளவன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி? தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

MUST READ