Homeசெய்திகள்தமிழ்நாடுE20 பெட்ரோல் எஞ்சின் பழுது விவகாரம் - கலப்பட ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு...

E20 பெட்ரோல் எஞ்சின் பழுது விவகாரம் – கலப்பட ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு…

-

- Advertisement -

நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசூகி அதிரடி மேல்முறையீடு!E20 பெட்ரோல் எஞ்சின் பழுது விவகாரம் - கலப்பட ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

E20 எரிபொருளால் காரின் எஞ்சின் பழுதானதாகத் தொடரப்பட்ட வழக்கில், வாடிக்கையாளருக்குப் புதிய கார் வழங்க வேண்டும் என்ற ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி (Maruti Suzuki) மேல்முறையீடு செய்துள்ளது.

we-r-hiring

புதிய கார் வழங்க நீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் ராய்ப்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தனது மாருதி காரில் E20 (20% எத்தனால் கலந்த) பெட்ரோல் பயன்படுத்தியதால் எஞ்சின் முற்றிலுமாகப் பழுதாகிவிட்டதாகக் கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ராய்ப்பூர் நுகர்வோர் குறைதீர் மன்றம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மாருதி சுசூகி நிறுவனம் புதிய காரை மாற்றிக் கொடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது.E20 பெட்ரோல் எஞ்சின் பழுது விவகாரம் - கலப்பட ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

ஆதாரங்கள் புறக்கணிப்பு: மாருதி சுசூகி வாதம்
நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தற்போது மாருதி சுசூகி நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “பாதிக்கப்பட்ட காரில் இருந்து சேகரிக்கப்பட்ட எரிபொருள் (பெட்ரோல்) மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அதில் கடுமையான கலப்படம் இருந்தது அறிவியல் பூர்வமாகத் தெரியவந்தது. ஆனால், இந்த முக்கிய ஆதாரத்தையோ மற்றும் இதர தொழில்நுட்ப ரீதியிலான உண்மைகளையோ நுகர்வோர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது” என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வாகன தயாரிப்பு துறையில் பெரும் பரபரப்பு
இந்தியாவில் தற்போது சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த எஞ்சின் பழுது விவகாரம் மற்றும் மாருதி நிறுவனத்தின் மேல்முறையீடு ஆகியவை வாகன தயாரிப்பு மற்றும் எரிபொருள் சந்தையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எஞ்சின் பழுதிற்கு எரிபொருளின் தரமின்மையே காரணம் என்பதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்களுடன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாக மாருதி சுசூகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி கார் கம்பெனிகள் ஆட்டம் செல்லாது! E20 பெட்ரோல் விவகாரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

MUST READ