Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த...

முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!

-

- Advertisement -

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேரம் (எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்ட விவகாரம்) தொடர்பாக, தமிழகக் காவல் துறை விசாரிக்காமல், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-யிடம் (CBI) ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!

குதிரை பேரம் தொடர்பாக அதிமுக சார்பில் தமிழக டி.ஜி.பி-யிடம் (DGP) இன்று மீண்டும் புதிய புகார் மனு அளிக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தலைமை காவல் நிலையத்திற்கு நேரில் வந்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் டி.ஜி.பி-யைச் சந்தித்து மனுவை அளித்தனர்.

we-r-hiring

கடந்த மே மாதம் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை இல்லை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
டி.ஜி.பி-யைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, ”கடந்த மே மாதமே குதிரை பேரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனநாயகத்திற்கு எதிரான இந்தச் செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் டி.ஜி.பி-யிடம் மனு அளித்துள்ளோம். சில சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்த அன்றைய தினமே, ‘தமிழக வெற்றி கழகத்தில்’ (தவெக) இணைந்தனர். அந்த ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டது சட்டப்பேரவை மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது.முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!

அதிமுக தலைமையின் மீது அதிருப்தி காரணமாகவே நிர்வாகிகள் வெளியேறுவதாகக் கூறுவது தவறான தகவல். அதிமுக தொண்டர்களோ, நிர்வாகிகளோ யாரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஆட்சியால் விலை பேசப்பட்டதாகக் கூறப்படும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தவெக-வில் இணைந்துள்ளனர். விலகிச் சென்ற 6 எம்.எல்.ஏ-க்கள் வெளியில் எடப்பாடி பழனிசாமி மீது என்னதான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், உள்ளுக்குள் என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கும், தொகுதி மக்களுக்கும் நன்றாகத் தெரியும்” என்றாா்.

முதலமைச்சர் விஜய்தான் முக்கிய குற்றவாளி: எம்.பி. இன்பதுரை அதிரடி
இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை, இந்த விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்,  ”அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட குதிரை பேரத்தை, தமிழ்நாடு காவல்துறையால் சுதந்திரமாக விசாரிக்க முடியாது. அதனால், இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. குதிரை பேரம் தொடர்பான விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்தான் முக்கிய குற்றவாளி. அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!

குதிரை பேரத்தை திமுக செய்தாலும், தவெக செய்தாலும் அது தவறுதான். கடந்த மே மாதமே புகார் அளித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? நடவடிக்கை எடுக்க அரசு அச்சப்படுகிறதா? தூய்மையான ஆட்சி என்று கூறுவது உண்மையானால், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பழனி தண்டாயுதபாணி கோவில் நிலப் பிரச்சினை இருப்பதாக அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அரசின் மீது நம்பிக்கை இருந்தால் அவர்கள் ஏன் உயர் நீதிமன்றத்தை அணுகாமல் தவிர்க்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தை நாடுவோம்
டி.ஜி.பி-யிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த மனுவின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று இரு தலைவர்களும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

“அரசியல் நெருக்கடியில் தவெக தலைவர் விஜய்; திமுகவின் வியூகத்தை எதிர்கொள்வாரா?” – அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அலசல்!

MUST READ