Homeசெய்திகள்தமிழ்நாடுபழனி கோவில் நில மோசடி விவகாரம்: உண்மைகளை மறைக்கப் பார்க்கிறாரா அமைச்சர் ரமேஷ்? – மரிதாஸ்...

பழனி கோவில் நில மோசடி விவகாரம்: உண்மைகளை மறைக்கப் பார்க்கிறாரா அமைச்சர் ரமேஷ்? – மரிதாஸ் அதிரடி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர் மரிதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.பழனி கோவில் நில மோசடி விவகாரம்: உண்மைகளை மறைக்கப் பார்க்கிறாரா அமைச்சர் ரமேஷ்? – மரிதாஸ் அதிரடி குற்றச்சாட்டு!​​கேள்வி கேட்ட பெண்ணுக்கு சிறை?
பழனி கோவில் நில முறைகேட்டில் அமைச்சரின் உறவினர்களுக்குத் தொடர்பு உள்ளதா எனக் கேள்வி எழுப்பி சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்த இந்திராணி என்ற பெண்மணியைக் காவல்துறை அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது. ஆனால், அந்த போஸ்டரை அவர் உருவாக்கவில்லை என்றும், அவருக்கு முன்பே பல லட்சக்கணக்கான மக்களால் அது பகிரப்பட்டுள்ளது என்றும் மரிதாஸ் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், பயத்தை உருவாக்குவதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சாட்டியுள்ளார்.

​100 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்த அதிகாரி: பின்னணியில் இருக்கும் சதி என்ன?
இந்த நிலப் பதிவின் போது பழனி சார்பதிவாளர் அலுவலக அதிகாரி விடுப்பில் இருந்துள்ளார். பொதுவாக உள்ளூர் அதிகாரி விடுப்பில் இருந்தால், 12 முதல் 18 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கீரனூர், சத்திரப்பட்டி அல்லது கல்லிமந்தை ஆகிய அலுவலகங்களிலிருந்து மாற்று அதிகாரிகளை நியமிப்பதே வழக்கம். ஆனால், இந்த விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானலில் இருந்து ஒரு சார்பதிவாளர் வரவழைக்கப்பட்டு, இந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலப் பதிவு முடிந்த இரண்டே நாட்களில் அந்த அதிகாரிக்குத் துறை ரீதியான பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.பழனி கோவில் நில மோசடி விவகாரம்: உண்மைகளை மறைக்கப் பார்க்கிறாரா அமைச்சர் ரமேஷ்? – மரிதாஸ் அதிரடி குற்றச்சாட்டு!​அமைச்சர்களின் முன்னுக்குப் பின் முரணான வாதங்கள்
இவ்விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், “சார்பதிவாளர் தெரியாமல் செய்துவிட்டார்” என அவருக்கு நற்சான்றிதழ் வழங்க முயன்றார்.  மற்றொரு துறையைச் சேர்ந்த அமைச்சர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே இப்பதிவு நடைபெற்றது எனத் தெரிவித்தார். ​ஆனால், நீதிமன்றத்தில் இந்த அரசு தாக்கல் செய்துள்ள விளக்கத்தில், நிலப் பதிவு நடைபெறுவதற்கு முன்பே இதுகுறித்த புகார்கள் மாவட்ட பதிவாளர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு வந்தும், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நிலப் பதிவு அரங்கேறியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் மூலம் பொதுமக்களிடமும் ஊடகங்களிடமும் அமைச்சர்கள் அப்பட்டமான பொய்களைக் கூறி ஏமாற்றி வருவது அம்பலமாகியுள்ளது.

we-r-hiring

​மரிதாஸின் கோரிக்கைகள்
​இந்த முறைகேட்டில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் மற்றும் பினாமி நபர்களைக் கண்டறிய இந்த நிலப் பத்திரத்தின் முழு விவரங்களையும், பணப் பரிவர்த்தனை குறித்த விவரங்களையும் அரசு உடனடியாகப் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். ​இந்த முறைகேட்டைத் தடுக்கத் தவறிய மற்றும் மூடி மறைக்கப் பார்க்கும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ​தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மீதான பழிவாங்கும் கைது நடவடிக்கைகளைக் காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் தற்போதைய அரசுக்கு முறையான விசாரணை நடத்தும் தகுதி இல்லை என்றும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை தொடர்ந்து குரல் எழுப்பப்படும் என்றும் மரிதாஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

பழனி கோவில் நில மோசடி: 100% நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்

MUST READ