Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆட்சியின் சீர்கேடுகளைத் சரிசெய்யாவிட்டால் அசிங்கமான பெயரே வரலாற்றில் மிஞ்சும்" – முதலமைச்சர் விஜய் மீது திமுக...

“ஆட்சியின் சீர்கேடுகளைத் சரிசெய்யாவிட்டால் அசிங்கமான பெயரே வரலாற்றில் மிஞ்சும்” – முதலமைச்சர் விஜய் மீது திமுக அலிம் அல்புகாரி கடுமையான சாடல்!

-

- Advertisement -

தமிழகத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தாவெக) ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்துவிட்டதாகக் கூறி, திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் துணைத் தலைவர் அலிம் அல்புகாரி தற்போதைய அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்."ஆட்சியின் சீர்கேடுகளைத் சரிசெய்யாவிட்டால் அசிங்கமான பெயரே வரலாற்றில் மிஞ்சும்" – முதலமைச்சர் விஜய் மீது திமுக அலிம் அல்புகாரி கடுமையான சாடல்!

​ ​மிகைப்படுத்தப்படும் விளம்பர அரசியல்
“தாவெகா அரசு என்பது பலதரப்பட்ட முரண்பாடான கொள்கைகளைக் கொண்ட ஒரு கலவையாகவும் பலப்பட்டறையாகவுமே காட்சியளிக்கிறது. வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு முதலமைச்சர் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளதாகச் சில அமைச்சர்கள் கூறுவது முற்றிலும் பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கேவலமான அரசியலாகும். மூத்த அரசியல் தலைவர்கள் கூட தங்களின் முதிர்ச்சியை மறந்து இத்தகைய சல்லித்தனமான மற்றும் அற்பமான விஷயங்களை ஆதரித்துப் பேசுவது அவர்களின் அரசியல் கூட்டணிக்கு அழகல்ல” என்று அலிம் அல்புகாரி சாடினார்.

we-r-hiring

​பாஜக எதிர்ப்பு கூட்டணியும் திமுகவின் நிலப்பாடும்
விஜய் தலைமையிலான தாவெக அரசுக்கும் பாஜகவிற்கும் இடையே திரைமறைவுப் புரிதல் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், “பாஜகவின் தீவிர எதிர்ப்பாளராகவும், ஒடுக்கப்பட்டோரின் போர்ப்படைத் தளபதியாகவும் விளங்கும் திருமாவளவன் போன்ற அமைச்சர்களையே, சட்டமன்றத்தில் வரலாற்றில் ஒன்றுமில்லாத விஜய் அரசின் சபாநாயகர் அமர வைக்க முடிகிறது என்றால், இது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். பாஜாக எதிர்ப்பில் தாவெகவும் திமுகவும் இணைய வேண்டிய அவசியமில்லை. மாறாக, திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து தாவேக்காவையும், அதன் பின்னால் இருக்கும் பாஜகவையும் சேர்த்தே வீழ்த்தும் வலிமையைக் கொண்டுள்ளன” என்றார்.

​சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் நீதிமன்ற விவகாரங்கள்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், பெங்களூரு வெடிகுண்டு வழக்குத் தொடர்புடைய நபர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் பின்னணியில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டினார். நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக ஒரு விஷயம் பதிவு செய்யப்பட்ட பிறகும், ‘எங்கள் கவனத்திற்கு வராமல் நடந்துவிட்டது’ என்று அரசுத் தரப்பில் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், எதிர்க்குரல்களை நசுக்குவதிலேயே இந்த அரசு முழு நேரத்தையும் செலவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

​முதலமைச்சருக்கு எச்சரிக்கை
விஜய் அவர்களின் செயல்பாடுகளை விமர்சித்த அலிம் அல்புகாரி, “தங்களுக்கு எதிராக எழும் விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்குச் செலவிடும் நேரத்தில் ஒரு பங்கையாவது தங்களது ஆட்சியில் மலிந்து கிடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளையும், கேவலங்களையும் துடைப்பதற்கு முதலமைச்சர் விஜய் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே வரலாற்றில் முதலமைச்சர்களின் வரிசையில் அவருக்கு ஒரு குறைந்தபட்ச நல்ல பெயராவது கிடைக்கும். இல்லையெனில், தமிழக முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்த ஒரு அசிங்கம் என்ற பெயர்தான் வரலாற்றில் அவருக்கு மிஞ்சும்” என்று மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகள் பெறும் விவகாரம்: ஆதார், வங்கி கணக்கு விபரங்களை உடனே பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

MUST READ