Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

மேகதாது அணை விவகாரம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

-

- Advertisement -

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான இந்த விவகாரத்தை அவசரகால முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி விவாதிக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இரு அவைகளிலும் நோட்டீஸ்
இது தொடர்பாக, நாடாளுமன்ற திமுக மக்களவைக் குழுத் தலைவரும், கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு, எம்.பி. அவர்கள் மக்களவைச் செயலருக்கும்; கழக மாநிலங்களவைக் குழுத் தலைவரான திருச்சி சிவா, எம்.பி. அவர்கள் மாநிலங்களவைச் செயலருக்கும் தனித்தனியே ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை அனுப்பியுள்ளனர். நாடாளுமன்ற அலுவல் நடத்தை விதிகளின் கீழ், பட்டியலில் உள்ள இதர பிற அலுவல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, இந்த விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

we-r-hiring

தீர்மானத்தின் முக்கிய விவரம்
திமுக எம்பிக்கள் அனுப்பியுள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தின் விவரம் வருமாறு,  “காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு புதிய நடுவர் தீர்ப்பாயத்தை (Tribunal) அமைக்க வேண்டியதன் அவசியம் ஆகிய அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை அவையில் விவாதித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும்.” மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்சமான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக முழு வீச்சில் தயாராகி வருவதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

“ஆட்சியின் சீர்கேடுகளைத் சரிசெய்யாவிட்டால் அசிங்கமான பெயரே வரலாற்றில் மிஞ்சும்” – முதலமைச்சர் விஜய் மீது திமுக அலிம் அல்புகாரி கடுமையான சாடல்!

MUST READ