spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் நாட்டை பின்னோக்கி தள்ளும் சதித்திட்டங்கள்! ஓரணியில் இணையும் தமிழக மக்கள்-முதல்வர்

தமிழ் நாட்டை பின்னோக்கி தள்ளும் சதித்திட்டங்கள்! ஓரணியில் இணையும் தமிழக மக்கள்-முதல்வர்

-

- Advertisement -

தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு மக்கள் ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனா் என்று தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழ் நாட்டை பின்னோக்கி தள்ளும் சதித்திட்டங்கள்! ஓரணியில் இணையும் தமிழக மக்கள்-முதல்வர் மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில அவா் கூறியிருப்பதாவது, ”நமது திராவிட மாடல்அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.தமிழ் நாட்டை பின்னோக்கி தள்ளும் சதித்திட்டங்கள்! ஓரணியில் இணையும் தமிழக மக்கள்-முதல்வர் இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில்  திமுகவின் ITwing அமைத்துள்ள “War Room”-ஐத் திறந்து வைத்தேன். விறுவிறுவென நடைபெற்று வரும் ”ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வா் கூறியுள்ளாா்.

இனி நோ ‘BACK BENCHERS’ பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

we-r-hiring

 

MUST READ