Homeசெய்திகள்தமிழ்நாடுமின்சாரத் துறையில் புதிய புரட்சி: சென்னையில் அனைவருக்கும் 'ஸ்மார்ட் மீட்டர்'! பிற மாவட்டங்களில் 50 லட்சம்...

மின்சாரத் துறையில் புதிய புரட்சி: சென்னையில் அனைவருக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’! பிற மாவட்டங்களில் 50 லட்சம் நுகர்வோருக்கு விரிவாக்கம்!

-

- Advertisement -

தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்த இந்த முதல் பட்ஜெட்டில், மின்சாரத் துறையை நவீனமயமாக்கவும், நுகர்வோரின் சேவைகளை எளிமைப்படுத்தவும் மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் டிஜிட்டல் வசதியுடன் கூடிய ‘ஸ்மார்ட் மீட்டர்கள்’ (Smart Meters) பொருத்தப்படும் என நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

மின்சாரத் துறையில் புதிய புரட்சி: சென்னையில் அனைவருக்கும் 'ஸ்மார்ட் மீட்டர்'! பிற மாவட்டங்களில் 50 லட்சம் நுகர்வோருக்கு விரிவாக்கம்!

we-r-hiring

சென்னை மாநகரம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்
100% நவீனமயம் சென்னை மாநகராட்சட்பட்ட அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து மின் நுகர்வோருக்கும் முதற்கட்டமாகச் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட உள்ளது. துல்லியமான கணக்கீடு, இதன் மூலம் மின் பயன்பாட்டினை நுகர்வோரே நேரடியாக டிஜிட்டல் முறையில் சுலபமாகக் கண்காணிக்க முடியும் மற்றும் கணக்கெடுப்பில் ஏற்படும் தவறுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

பிற மாவட்டங்களுக்கும் திட்டம் விரிவாக்கம்
சென்னை மட்டுமின்றி, மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் நுகர்வோர் பயன்பெறுவர், சென்னையைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிகச் சார்ந்த மின் நுகர்வோருக்கும் இச் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையும் மின் நிர்வாகமும்
ஏற்கனவே 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மூலம் மக்களுக்குக் மின்கட்டணச் சுமை குறைந்துள்ள நிலையில், இந்தச் ஸ்மார்ட் மீட்டர் அறிமுகம் மூலம் மின் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். மேலும் மின் கசிவு, மின் இழப்பு ஆகியவை பெருமளவில் தடுக்கப்பட்டு மின்வாரியத்தின் நிர்வாகத் திறனும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளித் துறைக்கு தவெக அரசின் ஜாக்பாட்: ரூ.10 கோடியில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்! பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிப்பு!

MUST READ