தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், பல்வேறு துறைகளுக்கும் புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


இதில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் பயனளிக்கும் வகையில் ‘புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இத்திட்டம் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு
கால்நடை வளர்ப்போருக்குப் பாதுகாப்பு, பாதுகாப்பான வாழ்வாதாரம், இயற்கைச் சீற்றங்கள், எதிர்பாராத நோய்த்தொற்றுகள் மற்றும் விபத்துகளால் கால்நடைகள் உயிரிழக்கும் போது, விவசாயிகளுக்கும் வளர்ப்போருக்கும் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுக்கும் வகையில் இக்காப்பீட்டுத் திட்டம் வடிவம் பெற்றுள்ளது.
நிதி உதவி
மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்குக் குறைந்த பிரீமியம் தொகையில் முழுமையான காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. கிராமப்புறப் பொருளாதாரம் மேம்படும், மாநிலத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக கிராமப்புறப் பொருளாதாரத்தின் முக்கிய அச்சாணியாகத் திகழ்வது கால்நடை பராமரிப்புத் துறையாகும். 2036-க்குள் தமிழ்நாடு 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற உழைப்பாளர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய இத்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது
விவசாயிகள் வரவேற்பு
கால்நடைகளின் எதிர்பாராத இழப்பால் கடன் சுமைக்கு ஆளாகும் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு இப்புதிய காப்பீட்டுத் திட்டம் ஒரு பெரிய பாதுகாப்பாக இருக்கும் என்பதால், இத்திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
