பள்ளிகளில் இனி ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ”ப” வடிவில் மாணவர்களுக்கான இருக்கைகள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பின்வரிசை மாணவர்கள் (Back Bench Students) என்ற நிலையைப் போக்கும் விதமாகவும், வகுப்பறையில் ஆசிரியர் மற்றும் பலகையை அனைத்து மாணவர்களையும் எளிதில் காணும் வகையிலும், அனைத்து மாணவர்களுகம் ஆசிரியரை கவனிக்க ஏதுவாக ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன.
வகுப்பறையில் இதுவரை நடைமுறையில் இருந்த நேர் வரிசை அமர்வுகளில் பின் வரிசையில் அமரும் மாணவர்களுக்கு பலகை தெளிவாக காண முடியாமல், ஆசிரியர்களின் கணவனத்தில் இருந்து விலகிபோகிரார்கள் என பல ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில், வகுப்பறை அமைப்பை மாற்றி, அனைத்து மாணவர்களும் ஆசிரியரையும் பலகையையும் நேரடியாகப் பார்க்கும் வகையில் ‘ப’ வடிவ அமர்வுகள் நடைமுறை ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு மாணவராலும் ஆசிரியர் மற்றும் பலகை, சக மாணவரை தெளிவாக காணலாம். முதல் இருக்கை, கடைசி இருக்கை என்ற பாகுபாடு விலகும். அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்களால் பார்க்க முடிவதோடு அவர்களுடனான உரையாடல் எளிதாகும். மேலும், மாணவர்களின் கற்றல் மற்றும் ஓழுக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி! விசாரணை நடத்த வேண்டுமென கே.பாலு வேண்டுகோள்…