spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசரக்கு ரயில் தீ விபத்து : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

சரக்கு ரயில் தீ விபத்து : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

-

- Advertisement -

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு தீயை அணைக்கும் பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

we-r-hiring

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து  தீயை அணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் பேசிய ஆட்சியர் பிரதாப் கூறியதாவது:- சென்னை, ஐ.ஓ.சி.எல் மணலியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி பெட்ரோலியப் பொருட்கள்  ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்தது. தீப்பிடித்ததற்கான காரணம், ஒரு பெட்டி தடம் புரண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தீ 4 பெட்டிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

தீ விபத்து காரணமாக, கடும் புகை கிளம்பியுள்ளது. இச்சூழல் அருகில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளாமல் இருக்க வேண்டும். தீயை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் தீவிரமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. விபத்து பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தங்கள் பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பொதுமக்கள் யாரும் இடையூறு ஏற்படுத்தாத விதமாக அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்‌.  சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவ மனைகளையோ  அல்லது அருகிலுள்ள அரசு அலுவலர்களை அணுக வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ