ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் பாகலூர் தேசிய நெடுஞ்சாலை செயல்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் அதிகமுள்ள இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலை குண்டு குழியுமாக மோசமாக உள்ளது.
இந்த சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீரமைப்புப் பணிகள் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மே மாதம் தொடங்கின. 3 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சாலையும் ஒருவழி மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இதனால் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதோடு சாலைகள் இருபுறங்களிலும் உள்ள கடைகளில் வணிகமும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பழுதடைந்த பாகலூர் சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே ஓசூர் நகர் மக்களின் கோரிக்கையாகியுள்ளது.
செந்தில்பாலாஜி கறி விருந்து! கொங்கில் எடப்பாடி வாஷ்அவுட்! ஜீவசகாப்தன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!