தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தொடர்பாக நாளை நடைபெறுகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோரும் பங்கேற்க வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணி( SIR) மூலம் நீக்கப்பட்டுள்ள உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இந்நிலையில் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலக்கிய மதிப்பீடுகளை `தணிக்கை` செய்யும் முயற்சி ஆபத்தான முன்னுதாரணம் – சு.வெங்கடேசன்



