திருப்பரங்குன்ற விவகாரம் வரலாற்று உண்மைகைளைக் கடந்து மத அரசியலாக மாறிய வழக்கு.
திருப்பரங்குன்றம் மேல்முறையீடு வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது ஒரு வழக்கு விசாரணை அல்ல அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையின் சிதைவாக மாறியது.
“தீபத்தூண்” என்று ஒன்று இருந்ததாகச் சொல்வது, வரலாற்று உண்மையல்ல;
அது தனி நீதிபதி சாமிநாதனின் அதீத கற்பனை.

- ஒரு கல்வெட்டு இல்லை.
- ஒரு தொல்லியல் ஆதாரம் இல்லை.
- ஒரு வரலாற்று குறிப்பும் இல்லை.
1920 ஆம் ஆண்டு ப்ரீவி கவுன்சில் தீர்ப்பு மிகத் தெளிவாக தர்கா பற்றியே பேசுகிறது. அதில் “தீபத்தூண்” என்ற சொல் கூட இல்லை. உண்மையில் அது இருந்திருந்தால், அன்றைய தீர்ப்பில் அது தவறாமல் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் இங்கே நடந்தது என்ன?
- தவறான நபர்களிடம் தவறான கேள்விகள்.
- அந்தக் கேள்விகளுக்குத் தவறான பதில்கள்.
- அந்தப் பதில்களின் அடிப்படையாகக் கொண்டு மத அரசியல்.
- அதிகாரம் இல்லாத இடத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.
- நடைமுறைகளை மீறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.
- அறநிலையத்துறையைத் தாண்டி நேரடியாக நீதிமன்ற அனுகல்.
இவை அனைத்தும் “நம்பிக்கை” பெயரில் நடத்தப்பட்ட சட்டத் துஷ்பிரயோகம்.
கோவில் நிர்வாகம் வழக்கம்போல், வழக்கமான இடத்தில், ஆகமப்படி தீபம் ஏற்றியுள்ளது. ஆனால் அதையும் சகிக்க முடியாதவர்களுக்கு, புதிய “தீபத்தூண்” தேவைப்பட்டது.
இதைவிட மோசமானது,
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் உள்ள சர்வே கற்கள் குறித்து ஆய்வு நடத்திய உண்மை தெரிந்தும், அந்த முடிவுகள் வருமுன்பே நீதிமன்ற உத்தரவு.
அரசியல் அவசரம்,
வரலாற்று உண்மைக்கு மேலான அவசரம். இவ்வளவு வலுவான சட்ட வாதங்களையும் மீறி, அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்தால். இது சட்டப் போரின் முடிவு அல்ல; உச்சநீதிமன்றத்தில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.
- திருப்பரங்குன்றம் விவகாரம் ஆன்மீகம் அல்ல.
- இது மத அரசியல்.
- இது அதிகாரத்தின் அதீத கற்பனை.
- இது வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை.
6000 ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் “தூங்க நகரம்” – மதுரை!


