”ஜெய்ஹொ” முழக்கமிட்டப்படியே 300 பக்தர்கள் வெளியேறியதால் ராமஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் வெறும் 100 பேரிடமே செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள 300 பேரிடம் பயணச்சீட்டு இல்லாதது தெரிய வந்ததை அடுத்து, ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர்.

அதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 100 பேரிடம் இருந்து ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் எஞ்சிய 300 பக்தர்கள் அபராதம் செலுத்த மறுத்து தப்பிச் செல்ல முயன்றனர். இதனைத் தடுக்க டிக்கெட் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தபோது, அவர்கள் “ஜெய்ஹோ” என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
”ஜெய்ஹோ” முழக்கமிட்டபடியே 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெளியேறியதால், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“காமக இணைப்பால் தமாகவுக்கு அரசியல் களத்தில் வசந்த காலம்” -ஜி.கே.வாசன் பெருமிதம்


