முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 7ஆம் தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது. இந்த கோவிலுக்கு அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் வந்து முருகனை வணங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தாா். அவருடன் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகம், வள்ளி, தெய்வானை, நடராஜர், சம்ஹார மூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தார். பக்தர்கள் மற்றும் பாஜக கட்சியினர் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவர் சென்றதும் அவருக்கு பின்னால் வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சூழ்ந்த பக்தர்கள் அவரை விடாமல் துரத்தி சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், மாநில அரசு அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு இந்த கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் கூட கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் சூழ்நிலையை முருகன் இந்த தமிழ் மண்ணிலே உருவாக்கி இருக்கிறார். முருகனை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி என்று கூறினாா்.
காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்