சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில், வாராந்திர உணவு திருவிழா, ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் நடக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாராந்திர உணவுத் திருவிழாவை, சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் தனியார் உணவு நிறுவனம் (டிராவல்ஸ் ஃபுட் சர்வீசஸ்) இணைந்து, இந்த உணவு திருவிழாவை நடத்துகின்றனர். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில், சர்வதேச விமான நிலையத்தில், டி எஃப் எஸ் லவுஞ்சில், பிரபல சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு, பயணிகளுக்கு நேரடியாக, சுவையான உணவுப் பொருட்களை தயார் செய்து கொடுக்கின்றனர்.
இந்த உணவு திருவிழாவில், குறிப்பாக பாராம்பரியமான தென்னிந்திய உணவுகள், அந்த உணவுகளின் சிறப்புகள், அந்த உணவுகளை உட்கொள்வதால், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் நன்மைகள், அதிகமான எண்ணெய், காரம் இல்லாமல், சுவை மிக்க உணவுகளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும், சமையல் கலைஞர்கள், கலந்து கொண்டுள்ள பயணிகளுக்கு நேரடியாக விளக்கம் அளிப்பார்கள்.சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் அனுபவத்தை, புதிய நிலைக்கு மேம்படுத்தும் திட்டத்துடன், இந்த விமான நிலைய உணவுத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. அதோடு தற்போது நவீன காலங்களில், பல்வேறு புதிய உணவுகள் வருகை காரணமாக, பாரம்பரியம் சிறப்புமிக்க, தென்னிந்திய சுவையான உணவுகள் தயாரிப்பது உட்கொள்வது, படிப்படியாக குறைந்து வருகிறது.
அந்தக் குறையை போக்கும் விதத்திலும், பாராம்பரிய தென்னிந்திய உணவு வகைகளின் சிறப்புகளையும், பல்வேறு உணவுகளில் உள்ள மருத்துவ குணங்களையும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளி மாநில, வடமாநில, வெளிநாட்டு பயணிகளுக்கும் எடுத்துக்காட்டும் விதத்திலும், இந்த உணவு திருவிழா நடத்தப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இந்த உணவு திருவிழாவின் முதல் தொடக்க நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் டி எப் எஸ் லவுஞ்சில் நடந்தது. சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி.தீபக், இந்த உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். பிரபல சமையல் கலைஞர் மற்றும் விமான பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இனிமேல் ஒவ்வொரு வாரமும், வியாழக்கிழமைகளில் நடக்கும் இந்த உணவு திருவிழாவில், பிரபல சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு, விதவிதமான பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை, சுவையாக தயாரித்து அளிப்பதோடு, அந்த உணவுகளை தயாரிக்கும் விதங்களையும் விளக்கி கூறி, விருந்தோம்பலை மேம்படுத்த இருக்கின்றனர். இவ்வாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்