முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானாா். இந்நிலையில் அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்து வந்தனா். முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுக்கு முழுஅரசு மாியாதை செய்யப்படும் என்று அறிவித்திருந்தாா்.
அதன்படி, சென்னை தியாகராயா் நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மலா்வளையம் வைத்து ” வீர வணக்கம்” என முழங்கி இறுதி மாியாதை செலுத்தினாா். கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, டி.ராஜா உள்ளிட்டோா் இறுதி மாியாதையில் பங்கேற்றனா். அரசியல் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள், கம்யூனிஸ்ட் தொண்டா்கள் உள்ளிட்டோரும் இறுதி மாியாதை செலுத்தினா். முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணு உடலுக்கு வி.கே.சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

மேலும், தியாகராயா் நகாிலிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு இறுதி ஊா்வலமாக நல்லகண்ணு உடல்எடுத்து செல்லப்படுகிறது. ராஜீவ் காந்தி மருத்துமனைக்கு மருத்துவ ஆய்வுக்காக நல்லகண்ணு உடல் ஒப்படைக்கப்படுகிறது.
தலைவர் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு


