சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சாக்கடை கால்வாய்க்குள் இளைஞர் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அந்த இளைஞரை மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகரில் நேற்று பெய்த கனமழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 19 வயது இளைஞர் நிலை தடுமாறி சாக்கடை கால்வாய்க்குள் விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இளைஞரை மீட்டனர். இளைஞரை மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தைப் பொறுத்தவரை கடந்த ஒரு வார காலமாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக கடுமையான வெயில் தாக்கி வந்த நிலையில் தற்போது ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது.
நேற்று அதிக அளவில் மழை கொட்டியதன் காரணமாக சேலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாரதா கல்லூரி சாலை, ஐந்து ரோடு, நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வழியாக சைக்கிளில் வந்த 19 வயது இளைஞர் ஒருவர் சாக்கடை இருப்பது தெரியாமல் அதில் விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 5 நிமிட வேளையில் அவரை உடனடியாக காப்பாற்றினார்கள்.
சாக்கடை கால்வாய்க்குள் இருந்து இளைஞரை மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.