Homeசெய்திகள்தமிழ்நாடுசமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

​சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

we-r-hiring

​இந்த விலை உயர்வு மார்ச் 7, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

​விலை உயர்வு விவரங்கள்
​வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், தற்போது ஒரே அடியாக உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றத்தின்படி, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஆகிய இரண்டின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ. 60 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விற்பனை விலை ரூ. 928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் ரூ. 114.50 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 300 மானியம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்களில் உணவு விலையேற்றத்திற்கும், நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமைக்கும் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா? – சண்முகம் ஆவேசம்……

MUST READ