நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பணிந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேசிய அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்த அதிரடி நடவடிக்கை குறித்து, மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான பிரியனின் பார்வையில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு,

பணிந்தது பாஜக அரசு – ஜனநாயகப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களும் ‘சிஜேபி’ அமைப்பும் இணைந்து அமைதியான முறையில் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் விளைவாகவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
- தார்மீகப் பொறுப்பு: கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மத்திய அரசு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மை கோரிக்கையை பாஜக தலைமை இறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
- மோடியின் நிலைப்பாடு மாற்றம்: ஆரம்பத்தில் இப்போராட்டத்தைப் பொருட்படுத்தாத மத்திய அரசு, நாடாளுமன்றத்தை நோக்கி ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் திரண்டு பேரணி நடத்திய பிறகே போராட்டத்தின் வீரியத்தையும் மக்கள் ஆதரவையும் புரிந்துகொண்டது.
- செல்வாக்கு சரிவு பயம்: 2029 பொதுத்தேர்தலில் இளைஞர்களின் கோபம் பாஜகவின் செல்வாக்கைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதை உணர்ந்தே, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் ‘நீட் விலக்கு’ கோரிக்கை சாத்தியமா?
இளைஞர்களின் இந்த மாபெரும் வெற்றியால், ‘நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க வேண்டும்’ என்ற தமிழ்நாட்டின் பல ஆண்டுகாலக் கோரிக்கை மீண்டும் தேசிய அளவில் வலுப்பெற்றுள்ளது.
- தேசிய அளவில் பரவும் உணர்வு: ஆரம்பத்தில் தேர்வை நடத்தும் முறைகேடுகளைக் கண்டித்துப் போராட்டம் தொடங்கினாலும், தற்போது வட இந்திய ‘ஜென்-சி’ (Gen-Z) இளைஞர்கள் மத்தியிலும் “நீட் தேர்வே தேவையில்லை” என்ற எண்ணம் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
- சமத்துவமின்மை: கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே நீட் தேர்வு பெரும் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது என்பதையும், கோச்சிங் சென்டர்களின் ஆதிக்கத்தையுமே இப்போராட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

சிஜேபி’ (CJP) – நாட்டின் புதிய அரசியல் சக்தியா?
உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தைத் தொடர்ந்து உருவான சிஜேபி (Cockroach Janata Party) இயக்கம், தற்போது நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
2014 அண்ணா ஹசாரே பாணி மாற்றம்
2011-ல் அண்ணா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டம் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைக்க வித்திட்டது. அதேபோல், தற்போது சிஜேபி எழுப்பியுள்ள இளைஞர்களின் எழுச்சி 2029 தேர்தல்களில் பாஜகவுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் அலைக்கு வித்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்களின் மன உறுதி
அடக்குமுறைகள், ஐடி விங் போலிப் பிரசாரங்கள் மற்றும் பொலிஸ் தடியடிகளைத் தாண்டி, தேசியக் கொடியுடனும் தேசிய கீதத்துடனும் உறுதியோடு நின்ற ‘ஜென்-சி’ இளைஞர்கள், மத்திய ஆட்சி அதிகாரத்திற்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டியுள்ளனர்.
கல்வி முறையை மறுவடிவமைப்பதற்கான மாபெரும் படி!” – மாணவர்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சி வாழ்த்து!
