பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட இருக்கும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கான மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது.

நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்து புதிதாக கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிராட்வேயில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி ரூ. 823 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவு திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.