spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு - மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

-

- Advertisement -

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார்.வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு - மு.வீரபாண்டியன் புகழாரம்

சென்னை தியாதராயர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவவலகமான ”பாலன்” இல்ல வாளாகத்தில், நல்லகண்ணு உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்பட உள்ளது. நாளை மாலை 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர், மருத்துவ ஆய்வுக்கா அவரது உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு நல்லகண்ணு உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

நல்லகண்ணு தனது கொள்கைகளில் எந்த சமரசமும் இன்றி வாழ்ந்தவர் என்றும், சாதி பாகுபாடு, வன்முறைகள், ஆணவக் கொலைகள் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவர் என்றும் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டார். பொதுவுடமை அரசியலின் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்ந்தவர் நல்லகண்ணு என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களிலும் செங்கொடி ஒரு வாரம் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

MUST READ