சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 38.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி(பொறுப்பு) பிரசாந்த் ஐஏஎஸ் வெளியிட்டார். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, இறுதி வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாநகராட்சியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை – 38,82,277 ஆகும். இதில்
ஆண் வாக்காளர்கள – 19,09,512, பெண் வாக்காளர்கள் – 19,71,653, மூன்றாம் பாலினம் வாக்காளர்கள்- 1112 உள்ளனர். வாக்காளர் பட்டியல் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் – 54,347, 64527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் எண்ணிக்கையில் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில், 1,70,125 வாக்காளர்களும், அதிகபட்சமாக எண் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,07,831 வாக்காளர்களும் உள்ளனர். மேலும்
09.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை விட தற்போது, 10180 குறைந்துள்ள நிலையில், சென்னையில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 3,723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர்
வாக்காளர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் .மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்துக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
