குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மொத்தம் ரூ.7 கோடியே 34 லட்சம் மதிப்பில் கேக் பாக்கெட்டுகளைக் கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டானியா, ட்ரீம் பேக், எலைட் நேச்சுரல் மற்றும் ஐடிசி ஆகிய நான்கு நிறுவனங்களிடம் இந்தக் கொள்முதல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 62.46 லட்சம் கேக் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: நிராகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வாதம்!
