தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நான்காவது குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மொத்தம் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் ஜனவரி வரை மின்சாரம் கொள்முதல்!
தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான மின் தேவையைச் சமாளிக்கும் வகையில் புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மின் தேவைக்கு ஏற்ப நாள் முழுவதும் மின்சாரம் வழங்கும் வகையிலும், நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலும், மாலை முதல் நள்ளிரவு வரையிலும் மின்சாரம் கிடைக்கும் வகையிலும் கொள்முதல் திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் – 1,400 மெகாவாட்!
நவம்பர் மாதத்திற்காக மொத்தம் 1,400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாள் முழுவதும் பயன்படுத்துவதற்காக 600 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 400 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 400 மெகாவாட்டும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
டிசம்பர் மாதம் – 700 மெகாவாட்!
டிசம்பர் மாதத்திற்காக மொத்தம் 700 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் நாள் முழுவதும் வழங்குவதற்காக 300 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 200 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 200 மெகாவாட்டும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் – 2,800 மெகாவாட்!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மின்சாரக் கொள்முதல் அளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாள் முழுவதும் பயன்படுத்துவதற்காக 1,200 மெகாவாட் மின்சாரமும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 800 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 800 மெகாவாட்டும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் நவம்பர் மாதம் 1,400 மெகாவாட், டிசம்பர் மாதம் 700 மெகாவாட், ஜனவரி மாதம் 2,800 மெகாவாட் என மொத்தம் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்!
இதற்கு முன்னதாகவும், தமிழகத்தின் மின் தேவையைச் சமாளிப்பதற்காகப் பல்வேறு காலகட்டங்களுக்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருந்தது.
நடப்பு மாத இறுதி வரையிலான தேவைக்காக 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டரும், 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரை 15,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டரும் கோரப்பட்டிருந்தன.
மேலும், நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மாலை நேர மின் தேவையைச் சமாளிப்பதற்காக மாதந்தோறும் 1,000 மெகாவாட் வீதம் மொத்தம் 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான குறுகிய கால டெண்டரும் கோரப்பட்டிருந்தது.
தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ந்து வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்காவது டெண்டர் கவனம் பெற்றுள்ளது.
