Homeசெய்திகள்தமிழ்நாடு"டெல்லி எஜமானர்களுக்காக தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்த முதல்வர்!" – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

“டெல்லி எஜமானர்களுக்காக தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்த முதல்வர்!” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

-

- Advertisement -

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவையில்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளதாக அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள கோரிக்கை:

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையிலேயே தாம் பேசியிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த ‘#SofaModel’ முதலமைச்சர் எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் என்பதால், மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

MUST READ