Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட கொள்கைகளை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் தத்துப் பிள்ளை தான் விஜய் -அரசியல் விமர்சகர்...

திராவிட கொள்கைகளை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் தத்துப் பிள்ளை தான் விஜய் -அரசியல் விமர்சகர் ஹரிஷ் இப்ராஹிம் பகீர்

-

- Advertisement -

தமிழகத்தில் திராவிட சித்தாந்தங்களை வீழ்த்துவதற்காகப் பின்னாளில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் திட்டமிடப்பட்டு நடிகர் விஜயின் தவெக களம் இறக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர் ஹரிஷ் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.திராவிட கொள்கைகளை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் தத்துப் பிள்ளை தான் விஜய் -அரசியல் விமர்சகர் ஹரிஷ் இப்ராஹிம் பகீர்

​ஸ்டாலின் தேர்தல் தோல்வியும், தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகமும்
​கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த விவகாரமும், அதைத் தொடர்ந்து பதிவான வாக்கு இயந்திரங்களில் உள்ள சந்தேகம் குறித்தும் பேசிய ஹரிஷ் இப்ராஹிம், “தேசிய அளவில் மதவாத அரசியலுக்கும், ஆரிய சித்தாந்தங்களுக்கும் எதிராக மிகத் தீவிரமாக நின்ற பெரும் தலைவர் மு.க.ஸ்டாலின். அத்தகைய ஒரு தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தது சாதாரணமானதல்ல. இதன் பின்னணியில் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வுகள் இருக்கக்கூடும். இருப்பினும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை விவகாரங்களில் என்ன முடிவு வருகிறதோ அதை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்” என்றார்.திராவிட கொள்கைகளை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் தத்துப் பிள்ளை தான் விஜய் -அரசியல் விமர்சகர் ஹரிஷ் இப்ராஹிம் பகீர்

we-r-hiring

​பாஜகவின் ‘சோசியல் இன்ஜினியரிங்’ மற்றும் தவெக உருவாக்கம்
​தமிழகத்தில் அதிமுக, சீமான் போன்றவர்களால் திமுகவை வீழ்த்த முடியாத நிலையில், தேசியக் கட்சிகள் மாற்றாக நடிகர் விஜய்யை அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திராவிட இயக்கத்தின் வேர்களை அசைத்துப் பார்ப்பதற்கே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தவெக அரசு பொறுப்பேற்று சில மாதங்களே ஆனாலும், மருத்துவப் படிப்புக்கான 27% ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம், மேகதாது அணைப் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அரசு கண்டும் காணாமல் மௌனமாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

​செந்தில் பாலாஜி மீதான தொடர் குறி & தவெக அரசின் நடவடிக்கைகள்
​முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான தொடர் வழக்குகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும், கொங்கு மண்டலத்தில் அவர் வைத்துள்ள அரசியல் கட்டமைப்பை எதிர்கொள்ளவே இந்த நடவடிக்கைகள் பாய்வதாகவும் அவர் கூறினார். மேலும், கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவங்கள் மற்றும் தவெக அமைச்சர்கள் மீதான பல்வேறு சர்ச்சைகளைச் சுட்டிக்காட்டிய அவர், பொறுப்புள்ள ஆட்சியாக இருக்க வேண்டிய தவெக அரசு, மக்களின் உரிமைகளைக் காப்பதில் தோல்விடைந்து வருவதாக விமர்சித்தார். தமிழக அரசியலின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் எதை நோக்கிச் செல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்! முன்ஜாமீன் தள்ளுபடி.. தமிழக அரசு அவசரப்படுவது ஏன்? தராசு ஷியாம் பரபரப்பு பேட்டி!

MUST READ