spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்”போலி காதலன்" வேலை - புது ட்ரெண்ட்

”போலி காதலன்” வேலை – புது ட்ரெண்ட்

-

- Advertisement -

”போலி காதலன்" வேலை - புது ட்ரெண்ட்”போலி காதலன்” வேலை புதிய ட்ரெண்டாக வியட்நாமில் நடைமுறையில் உள்ளது.

திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் உறுதியளிக்கும் ஒரு உறுதிப்பாடாக கருதப்பட்டு வந்தது. திருமணம் என்பது “ஆயிரங்காலத்துப்பயிர்”. திருமண விழாவில் சபதங்கள் எடுத்து , ஒரு திருமண விழாவை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் தனிப்பட்டதாகவும் நடத்தி வருகின்றனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் படிப்பு, திருமணம் , பிள்ளைப் பேறு  நடக்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது.

we-r-hiring

ஆனால் இப்போது அயல் நாடுகளில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து தெரிந்து கொண்ட பின்புதான் புது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே  திருமண கலாச்சாரம் மாற்றத்தை நோக்கி நகர்வதை அறிய முடிகிறது.

இந்த சூழலில், திருமண வயதை எட்டிய வியட்நாம் இளம்பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க  தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறையை தற்போது வியட்நாமில் கடைபிடித்து வருகின்றனர். பெற்றோர்கள் திருமணம் செய்துகொள்ளும்படி  பிரஷர் தருவதால் அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

வடக்கு வியட்நாமை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவரின் பெற்றோர் காதலனை வீட்டிற்கு அழைத்து வருமாறு வற்புறுத்தியதன் காரணமாக வாடகைக்கு காதலனை அழைத்து சென்று இருக்கிறார்.

வாடகைக்கு சென்ற 25 வயதான நபர் கூறும்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக “போலி காதலனாக” வேலை செய்து வருகிறேன் என்று கூறி உள்ளார்.  தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜிம் பயிற்சி, சமையல் கற்றுக்கொள்வது, பாடும் திறன், தோற்றம் மற்றும் தேவையான அனைத்து திறன்களை வளர்த்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்தே இந்த நடைமுறை அறிமுகமாகி நடைமுறையில் உள்ளது என கூறப்படுகிறது.

‘விடுதலை 2’ பிஜிஎம் பணிகளை நிறைவு செய்த இளையராஜா….. நன்றி தெரிவித்த வெற்றிமாறன்!

MUST READ