Homeசெய்திகள்உலகம்நேபாள பெருவெள்ளம்: 10 நிமிட டீ பிரேக்... 5 இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்!

நேபாள பெருவெள்ளம்: 10 நிமிட டீ பிரேக்… 5 இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்!

-

- Advertisement -

திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் நேபாளத்தில் கோரத் தாண்டவம் ஆடியுள்ள நிலையில், டீ குடிக்க எடுத்த சிறிய இடைவெளியால் சத்தீஸ்கரைச் சேர்ந்த 5 நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேபாள பெருவெள்ளம்: 10 நிமிட டீ பிரேக்... 5 இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்!

நேபாளத்தில் கரைபுரண்ட பெருவெள்ளம்
கடந்த ஆகஸ்ட் 26 அன்று திபெத்தின் எல்லைப் பகுதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தின் போட்டேகோஷி நதி வழியாகப் பல்வேறு மாவட்டங்களுக்குள் நுழைந்தது. அடித்து வரப்பட்ட பாறைகள் மற்றும் சகதியால் ஏராளமான வீடுகளும் கட்டிடங்களும் தரைமட்டமாகின. இக்கோரத் தாண்டவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

சுற்றுலா சென்ற நண்பர்கள்
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த நாராயண் சென், தினேஷ் ஒஜா, பிரேம்சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாகூர் ஆகிய 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 5 நண்பர்கள் கடந்த ஆகஸ்ட் 22 அன்று நேபாளத்திற்கு வாடகை வாகனத்தில் சுற்றுலாச் சென்றிருந்தனர். சுற்றுலாவின் 5-வது நாளான ஆகஸ்ட் 26 அன்று, நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள மலேகு பகுதியில் தேநீர் அருந்துவதற்காகத் தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

உயிரைக் காப்பாற்றிய ‘டீ பிரேக்’
அவர்கள் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். என்னவென்று எட்டிப் பார்த்தபோது, சகதியுடன் ஆற்று வெள்ளம் சீறிப் பாய்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தேநீர் குடிக்க எடுத்த அந்த 10 முதல் 15 நிமிட காலதாமத இடைவெளியே அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. ஒருவேளை அவர்கள் தேநீர் அருந்தாமல் காரில் முன்னேறிச் சென்றிருந்தால், அந்த பெருவெள்ளத்தில் நேரடியாகச் சிக்கியிருப்பார்கள்.

பாதுகாப்பாக வீடு திரும்பினர்
வெள்ளத்தைக் கண்டதும் உடனடியாக உயரமான, பாதுகாப்பான பகுதிக்கு அவர்கள் விரைந்தனர். அங்குக் மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லையென்றாலும், இணைய வசதி இருந்ததால் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். உள்ளூர் மக்கள் அவர்களுக்கு இரண்டு நாட்கள் உணவு வழங்கி உதவிய நிலையில், அவர்கள் வாகனத்திலேயே உறங்கி நாட்களைக் கழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய அவசர மீட்புக் குழுவினரின் உதவியோடு பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த 5 நண்பர்களும், கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) தாயகம் திரும்பித் தங்களது வீடுகளை அடைந்தனர். “அந்த டீ பிரேக் தான் எங்களது மறுஜென்மம்” என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

நேபாள வெள்ளம்: அற்புதமாக உயிர் தப்பிய பச்சை நிற வீடு! வைரல் வீடியோவின் பின்னணி

MUST READ