Homeசெய்திகள்உலகம்காசா அமைதித் திட்டம் நிராகரிப்பு: இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவிப்பு

காசா அமைதித் திட்டம் நிராகரிப்பு: இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவிப்பு

-

- Advertisement -

​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்துள்ளார். குறி காசாவில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிட்டு வெளியேறும் வரை தங்களது பாதுகாப்புப் படைகள் பின்வாங்காது என்றும், திட்டத்தை ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.காசா அமைதித் திட்டம் நிராகரிப்பு: இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவிப்பு

அமைதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
​அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட இந்த 15 அம்சத் திட்டத்தின்படி ​ஹமாஸ் அமைப்பினர் படிப்படியாகத் தங்களது ஆயுதங்களைக் கைவிட வேண்டும். ​காசாவில் சர்வதேச பாதுகாப்புப் படை நிலைநிறுத்தப்பட வேண்டும். ​அங்கு புதிய பாலஸ்தீன நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டு, ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் தங்களது ஆயுதங்களை அந்த புதிய நிர்வாகத்திடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

we-r-hiring

இஸ்ரேலின் நிலைப்பாடு:
​இந்த அமைதித் திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே விருப்பம் இல்லாவிட்டாலும், அமெரிக்காவை உடனடியாக எதிர்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு இஸ்ரேல் வெளிப்படையாக மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறி L இருப்பினும், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கலைக்கும் வரை இஸ்ரேலியப் படைகள் காசாவை விட்டு விலகாது என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.

​குறி L  இதற்கிடையே, வாஷிங்டன் தரப்பில் இந்த விவகாரத்தில் சில மாற்றுக் கோரிக்கைகள் அல்லது நடவடிக்கைகள் இருக்கலாமா என்பது குறித்தும், இதற்கு அமெரிக்கா தரப்பில் எத்தகைய எதிர்வினை ஆற்றப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

“இனி இவர்தான் எல்லாமே!”.. வெள்ளை மாளிகையின் சட்ட ஆலோசகரை மாற்றிய ட்ரம்ப்.. பின்னணியில் என்ன நடந்தது?

MUST READ