Homeசெய்திகள்உலகம்டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்' - வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!

டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்’ – வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!

-

- Advertisement -

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டங்களுக்கு பலியாகும் அளவுக்கு ஏமாளியாக இருக்கும் ஒரே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் என்று புகழ்பெற்ற வரலாற்று பேராசிரியர் அவி ஸ்லைம் (Avi Shlaim) விமர்சித்துள்ளார்.டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்' - வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!

இஸ்ரேலின் மிகவும் மதிக்கப்படும் சர்வதேச உறவுகள் ஆய்வாளர்களில் ஒருவரான அவி ஸ்லைம், டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையிலான உறவு குறித்து கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

ஆட்டிப்படைக்கும் நெதன்யாகு: டொனால்ட் டிரம்ப் ஒரு “மடிநாய்” (Poodle) போன்றவர் என்றும், நெதன்யாகு அவரைத் தனக்கு ஏற்றவாறு “ஒரு பிடில் வாசிப்பது போல” (Plays him like a fiddle) மிக எளிதாகக் கையாண்டு ஆட்டிப்படைக்கிறார் என்றும் ஸ்லைம் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்:
ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பது நெதன்யாகுவின் நீண்ட காலத் திட்டம். இந்த ஆபத்தான திட்டத்தில் இணைந்து செயல்படக்கூடிய அளவுக்கு “முட்டாள்தனமான” அல்லது “ஏமாறக்கூடிய” ஒரே அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமே என அவர் சாடியுள்ளார்.

டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்' - வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!

சாத்தியமற்ற இலக்கு: வெறும் வான்வழித் தாக்குதல்கள் (Air Strikes) மூலம் மட்டும் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றிவிட முடியாது என ஸ்லைம் எச்சரிக்கிறார். மாறாக, இத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகும் ஈரான் அரசு தப்பிப்பிழைக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தற்போதைய சூழலில் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்றால், அவர் முந்தைய தலைவர்களை விட அதிக இரக்கமற்றவராகவும், கடும்போக்குடையவராகவும் இருப்பார் என்று அவி ஸ்லைம் கருதுகிறார்.

யார் வெற்றியாளர்?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த மோதல் குறித்து ஸ்லைம் ஒரு சுவாரசியமான பார்வையை முன்வைக்கிறார்:

“இந்த யுத்தத்தில் ஈரான் வீழாமல் தன்னைத் தக்கவைத்துக்கொண்டாலே அது அந்த நாட்டிற்கு கிடைத்த வெற்றிதான். ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது முழுமையான வெற்றியை அடையவில்லை என்றால், அது தோல்வி அடைந்ததாகவே கருதப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்குக் கேள்வி எழுப்பிய அலி லாரிஜானி: இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா?

MUST READ