Homeசெய்திகள்உலகம்அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி

அமெரிக்கா – தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி

-

அமெரிக்கா – தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி

அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

உலக நாடுகளின் பெறும் எதிர்பார்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது.

மெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா கடந்து சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்கொரியா உடன் இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அந்த வரிசையில் வடகொரியாவை ஆத்திரமூட்டும் விதமாக ஃப்ரீடம் ஷீல்ட் 23 என்று பெயரில் 11 நாட்கள் போர் ஒத்திகை இரு நாடுகளும் தொடங்கியுள்ளன. இந்த போர் பயிற்சி ஆனது வடகொரியாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியோலின், பர்ஷியான் பகுதியில் நடைபெற்று வருகிறது.

போர் விமானங்கள் டாங்கிகள், எம் 777 ஹோஒயிட்சர் போன்ற போர் வாகனங்களுடன் இருநாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் நிலைகள் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலும் தென்கொரியாவுக்கு வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஒரே நாளில் பல ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி வடகொரியா பதிலடி கொடுத்துள்ளது.

கடற்பரப்பில் ஏவுகணைகள் செலுத்தப்பட்டதை உறுதி செய்திருக்கும் தென்கொரியா இது குறித்த ஆய்வுகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. தொடர் ஏவுகணை சோதனை அதிநவீன கருவிகள் உடன் போர் பயிற்சியும் தொடர்வதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

MUST READ