”தைரியம் இல்லாதவர் மெலோனி” என இத்தாலி பிரதமர் மெலோனியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளாா்.
ஈரானுடன் நடைபெற்று வரும் போரில் வாஷிங்டனுக்கு ஆதரவளிக்க இத்தாலி மறுத்ததே இந்த மோதலுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது நெருங்கிய ஐரோப்பிய கூட்டாளிகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இத்தாலிய முன்னணி நாளிதழான கொரியர் டெல்லா செராவுக்கு அவர் அளித்த பேட்டியில், ”இத்தாலி பிரதமர் மெலோனிக்க தைரியம் இருப்பதாக நினைத்தேன், ஆனால் தப்பு கணக்கு போட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், ஈரான் போரில் எங்களுடன் இணைய மறுத்துவிட்டார். நேட்டோ தொடர்பான முக்கிய விஷயங்களிலும் மெலோனி தேவையான ஆதரவை வழங்கவில்லை. ஈரானை அணு அச்சுறுத்தலாகக் கருதும் நிலையில், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இத்தாலி முன்வராதது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை முடிவுக்க கொண்டுவர வேண்டும் என போப் லியோவுக்க ஆதரவாகவும், இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மெலோனி இடைநிறுத்தியதையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு, ஈரான் தொடர்பான சர்வதேச அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, அமெரிக்கா–இத்தாலி உறவில் பிளவு உருவாகும் சாத்தியம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. மேற்கத்திய நாடுகளுக்குள் உருவாகும் இந்த கருத்து வேறுபாடு, உலக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
நெருக்கடியில் சென்ற ஈரானின் எண்ணெய் கப்பல் – அதிர்ச்சியில் அமெரிக்கா படைகள்
