spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்மெத்தையை சாப்பிடும் வினோத பெண்

மெத்தையை சாப்பிடும் வினோத பெண்

-

- Advertisement -

நம்ம எல்லாருக்குமே ஒரு சில வித்தியாசமான பழக்கங்கள் இருக்கும். சிலர் கோயில்களில் தரப்படும் திருநீர சாப்பிடுவாங்க, சிலர் சாப் பீஸ், ஸ்லேட் பென்சிலா சாப்பிடுவாங்க. ஏன், இன்னும் ஒரு சிலர் மண் கூட சாப்பிடுவாங்கனு கேட்டிருப்போம். ஆனால், யாராவது மெத்தையில் இருக்குற ஸ்பாஞ்ச சாப்பிட்டு கேள்வி பட்டிருக்கீங்களா? அமெரிக்க பெண் ஒருவருக்கு இந்த பழக்கம் உண்டு. கேக்கவே ரொம்ப வினோதமா இருந்தாலும், இது உண்மை தான்.

we-r-hiring

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் எனும் 25 வயது இளம்பெண்ணுக்கு தான் மெத்தைய சாப்பிடும் வித்தியாசமான பழக்கம் உள்ளது. தனது 5 வயதுல தான் முதன்முதலாக மெத்தைய சாப்பிட தொடங்கியிருக்காங்க. கிட்டத்தட்ட 20 வருடங்களாகியும் அந்த பழக்கத்துக்கு தான் அடிமையா இருக்குறதாக அவங்களே தெரிவித்திருக்கிறார்கள்.

சிறு வயதில் தற்செயலாக கார் சீட்டில் இருக்கும் பஞ்சுளை சாப்பிட தொடங்கியிருக்காங்க. அதோட சுவை அவங்களுக்கு பிடித்துப் போக, அடுத்து தான் தினசரி தூங்கும் மெத்தைய சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு சதுர அடி என்று கணக்கு வைத்து சாப்பிடுகிறார்கள் அன்த பெண்மணி.

இப்படி தினந்தோறம் மெத்தையை சாப்பிட்ட அவங்க உடலுக்கு எந்த பிரச்சனையும் வராதா? என்று அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது. ஆனால், அப்பெண்ணின் உடலுக்கு எந்த பிரச்சனையும் இதுவரை வந்தது இல்லை. அதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம் என்று சொல்லலாம். அவர் சாப்பிடும் பஞ்சு முறையா செரிமானம் ஆவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், இதுபோல தொடர்ந்து சாப்பிட்டால், எதிர்காலத்தில் கல்லீரல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த 20 வருடத்தில், தன்னோட மெத்தையை சாப்பிட்டு முடித்து, அடுத்ததாக அம்மா உறங்கும் மெத்தையையும் சாப்பிட்டு விட்டதா ஜெனிபர் சொல்லியிருக்காங்க. இது எங்க போயி முடியும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

MUST READ