Homeசெய்திகள்உலகம்முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி கைது! லஞ்ச ஒழிப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கை

முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி கைது! லஞ்ச ஒழிப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கை

-

- Advertisement -

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள், கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடத்திய பின்னர் அவரை கைது செய்தனர்.

we-r-hiring

லஞ்ச ஒழிப்பு ஆணையம் நடவடிக்கை

சிராந்தி ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சே அதிபராக இருந்த 2005 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் செயல்பட்ட ‘சிரிலியா சவியா’ என்ற தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய நிதி விவகாரம் தொடர்பாக விசாரணையை எதிர்கொண்டு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவரது கொழும்பு கிருலப்பனை இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரூ.1 கோடி நிதி முறைகேடு புகார்

அரசுக்குச் சொந்தமான வங்கியில் இருந்து சுமார் 10 மில்லியன் இலங்கை ரூபாய் பெற்றதாகவும், அந்த நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் சிராந்தி ராஜபக்சே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையம், அரசுச் சொத்து சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் கைது

சிராந்தி ராஜபக்சே சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். திங்கள்கிழமை அவர் இலங்கை திரும்பிய நிலையில், தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும், ‘சிரிலியா சவியா’ அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைக்காக அக்டோபர் 13-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தியிருந்தது.

முன்ஜாமீன் கோரி மனு

தன்னை கைது செய்யக்கூடும் என்ற நிலையில், சிராந்தி ராஜபக்சே தரப்பில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தற்போதைய கைது நடவடிக்கை இலங்கையில் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகள்

மஹிந்த ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பல்வேறு நிதி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றன.

மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் தனித்தனி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்த சூழலில், முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சே கைது செய்யப்பட்டிருப்பது இலங்கை அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் துணை பைலட்டின் கோடாரி தாக்குதலில் இந்திய பைலட்டின் மண்டை ஓடு உடைந்தது! அதிர்ச்சி தகவல்கள் வெளியானது

MUST READ