Homeசெய்திகள்உலகம்டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: 13 பேரை கொன்ற முன்னாள் ராணுவ மேஜருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண...

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: 13 பேரை கொன்ற முன்னாள் ராணுவ மேஜருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை – டிரம்ப் ஒப்புதல்!

-

- Advertisement -

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

we-r-hiring

இந்த சம்பவத்தில் குற்றவாளியாக முன்னாள் அமெரிக்க ராணுவ மேஜரும், ராணுவ மனநல மருத்துவருமான நிடால் மாலிக் ஹசன் கைது செய்யப்பட்டார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிடால் ஹசனுக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி பீட் ஹெக்செத் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மற்றும் இடத்தை அமெரிக்க ராணுவ செயலாளர் முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

நிடால் ஹசனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அமெரிக்க ராணுவத்தில் 1961-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மரண தண்டனையாக இது அமையும். மேலும், ராணுவ துப்பாக்கிப் படை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அரிதான நடவடிக்கையாகும்.

2009-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த வீரர்கள் மீது நிடால் ஹசன் துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் நடந்த ராணுவ நீதிமன்ற விசாரணையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்க ராணுவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள நிலையில், டிரம்பின் இந்த ஒப்புதல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

MUST READ