Homeசெய்திகள்தமிழ்நாடுமின் இணைப்புடன் ஆதார் இணைக்க - கடைசி நாள்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க – கடைசி நாள்

-

- Advertisement -

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்றை கடைசி நாள் இனி என்றும் இனி கால நீட்டிப்பு வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இலவச மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என  அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

அதனை எடுத்து நவம்பர் 15 ஆம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்து. பின்னர் மீண்டும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்ட நிலையில், அப்போது சுமார் 7 லட்சம் பேர் இணைக்காமல் இருப்பது தெரியவந்தது. இதன் காரணத்தினால் மீண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை இணையதளம் மூலமாகவும் மின்வாரியம் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெறும் என்று அறிவித்தனர்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரியம் அலுவலகங்களில் 2811 சிறப்பு முகாம்களும், கூடுதலாக 2811 நடமாடும் சிறப்பு முகாம்களும் நடைபெற்றது.
இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

கடந்த முறை காலம் நீட்டிப்பு வழங்கிய போது இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்தவர். அதன்படி இன்றுடன் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போர்டல் மூடப்படும்.

MUST READ