கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இமாலய வெற்றி கண்டது. எனவே அடுத்ததாக ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி சமீப காலமாக ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கு ஹுக்கும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 2024 அக்டோபர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -
